undefined

பெண்களுக்கு 'நோ என்ட்ரி'... ஆண்கள் மட்டுமே கொண்டாடிய அய்யனார் கோயில் பொங்கல்!

 

 பொங்கல் பண்டிகை என்றாலே குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார் மண்டபம் கிராமத்தில், பல தலைமுறைகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பொங்கல் விழா அரங்கேறி வருகிறது. இந்தக் கிராமத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், தமிழர் திருநாளையொட்டி ஒன்றுகூடி இத்திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் வைப்பதற்காகப் புதிய மண்பானைகளைச் சுமந்து கொண்டு ஊர் ஆண்கள் அனைவரும் ஊர்வலமாகச் சென்றனர். கிராமத்திலுள்ள குளத்தின் கரையில் அடுப்பு தோண்டி, குளத்திலிருந்து பனை ஓலைகள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து, வெல்லந்தாங்கி அய்யனார் கோயில் அருகே பொங்கலிட்டனர்.

இந்த வழிபாட்டில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து, அதனை அய்யனாருக்குப் படையலிட்டு, அங்கேயே அனைவரும் பகிர்ந்து உண்கின்றனர். இந்த பொங்கலை ஆண்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்பது ஐதீகம்.

தங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து வருவதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்படி ஆண்கள் மட்டும் திரண்டு பொங்கல் வைப்பதன் மூலம் விவசாயம் செழிக்கும், கால்நடைகளுக்கு நோய் நொடி வராது, வருங்காலத் தலைமுறையினர் (பிள்ளைகள்) சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நேரத்தில் கிராமத்துப் பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!