undefined

இனி  அரசு மருத்துவமனைகளில் கட்டணம்… புதிய அறிவிப்பு!

 
 

மகாராஷ்டிராவில்  இதுவரை இலவசமாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் சேர்க்கைக்கு நாளுக்கு ரூ.10 மற்றும் புறநோயாளிகள் பதிவு செய்ய ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரத்த பரிசோதனைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.15 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ட்ராவெனஸ் பைலோகிராம் எக்ஸ்ரே ஸ்கேனுக்கு ரூ.100 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் தலைப்பகுதிக்கு ரூ.300 மற்றும் மார்பு, கழுத்து, முதுகுத்தண்டு பகுதிகளுக்கு ரூ.400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ரூ.1,600 வசூலிக்கப்படும் என்றும், மயக்க மருந்துடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.60 முதல் ரூ.160 வரை கட்டணம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் பிரசவம் இலவசமாக இருக்கும் நிலையில், இரண்டாவது பிரசவத்திற்கு ரூ.50 மற்றும் அதற்கு பிந்தைய பிரசவங்களுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும். ஐசியு பிரிவுக்கு நாளுக்கு ரூ.100, ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைக்கு ஒரு அமர்வுக்கு ரூ.150 மற்றும் அறை வசதிகளுக்கு ரூ.75 முதல் ரூ.150 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.5 மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.40,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!