"அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது!" - சேலத்தில் எடப்பாடி அனல் பறக்க பேச்சு!
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இரட்டை மாட்டு வண்டியை அவரே ஓட்டி வந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தியதுடன், 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
"தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதுபோல இந்தத் தேர்தல் ஆண்டு அதிமுக ஆட்சி அமைய வழி பிறக்கும். அதிமுக ஆட்சி அமைப்பதைத் தமிழகத்தில் எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது" என ஆவேசமாகப் பேசினார். அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக ஏற்கனவே இணைந்துள்ளது. இன்னும் பலம் வாய்ந்த கட்சிகள் நம்முடன் இணைய உள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே அங்கிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது" என அரசியல் அதிரடியைக் கிளப்பினார்.
"இன்று தமிழகத்தில் போராட்டம் இல்லாத நாளே இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைவரும் தெருவில் நின்று போராடுகிறார்கள். இந்தத் திறமையற்ற விடியா அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்" என்று திமுக அரசைச் சாடினார்.
தமிழகத்தில் நிரந்தர டிஜிபி (DGP) கூட நியமிக்க முடியாத நிலையில் இந்த ஆட்சி உள்ளது. பொறுப்பு டிஜிபியை நியமிக்கும் அவல நிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!