"திமுக-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுவிட முடியாது" - முதல்வர் ஸ்டாலின் முழக்கம்!

 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் தேர்தல் வியூகத்தை வகுக்கும் வகையில் அமைந்த இந்த மாநாட்டில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஆவேசமாக உரையாற்றினார். தனது உரையில் திமுக-வின் வலிமை குறித்துப் பேசிய முதல்வர்.

"திமுக என்பது ஒரு ஆலமரம். இதனை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. திமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள் ஒழிய, இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடிந்ததில்லை" என அதிரடியாக முழங்கினார். திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம் எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொண்டர்களுக்குப் புதிய இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ளார்: வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும், அவர்களைத் தேடிச் சென்று நமது சாதனைகளை விளக்கி, கடைசி நிமிடம் வரை வாக்குச் சேகரிக்க வேண்டும். இதுவே நான் உங்களுக்குத் தரும் கட்டளை" என்று கூறினார்.

மத்திய பாஜக அரசை "பூஜ்ஜியம்" எனக் குறிப்பிட்டு முதல்வர் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டம், பேரிடர் நிவாரணம் போன்ற எதற்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. "மத்திய அரசு நமக்கு பூஜ்ஜியத்தைத்தான் தந்துள்ளது. நாமும் அவர்களுக்கு வரும் தேர்தலில் பூஜ்ஜியத்தையே பரிசாக அளிக்க வேண்டும்" என்றார்.

மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதே திமுக-வின் கொள்கை. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, அவற்றை நகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது; அதனைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரித்தார். இளைஞரணியைச் சிறப்பாக வழிநடத்தி வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மனதாரப் பாராட்டினார்.

"இளைஞரணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து ஒரு ராணுவப் படையைப் போன்ற கட்டமைப்பை உதயநிதி உருவாக்கியுள்ளார். இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது போல, திராவிட மாடல் ஆட்சி 'காலை உணவுத் திட்டத்தை' கொண்டு வந்துள்ளது. இதற்காக உதயநிதிக்கும் அமைச்சர்களுக்கும் விருதுநகரில் 'விருது' வழங்குகிறேன் எனப் பெருமிதம் கொண்டார். இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் மிக முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!