ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது… அரசு ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
அரசு பணியில் இருந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியை எந்த காரணத்திற்காக விட்டாலும், அதற்கான சேவை காலத்தை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் உள்ள விதிகளின்படி, அரசு ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்தால் அவர் செய்த முந்தைய சேவை காலம் செல்லாது என கருதப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் பணியை விட்டாலும் அதற்கு விதிகளில் விலக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா இரண்டும் வேறுபட்டவை என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
விருப்ப ஓய்வுக்கு தனித்தனி நிபந்தனைகள் உள்ள நிலையில், சாதாரண ராஜினாமாவை ஓய்வூதியத்துடன் இணைக்க முடியாது என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால் அரசு பணியில் இருந்து தன்னிச்சையாக விலகும் ஊழியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை பெற முடியாது என்பது தெளிவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!