உறவினர் இறப்புக்கு துக்கம் விசாரிக்க சென்ற பெண்... இருசக்கர வாகனத்தில் தடுமாறி விழுந்து பலி!

 

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் இடங்களாக கருதப்படும் இடங்களில் இந்த வேகத் தடையை அமைத்துள்ளனர்.

போடி குப்பிநாயக்கன்பட்டியில் இருந்து பெரியகுளத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி அம்சவள்ளி, மகன் தீபக்குமார். இந்நிலையில், தீபக்குமார் தனது தாயார் அம்சவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில், உறவினர் இறப்பு நிகழ்வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 

கைலாசபட்டி காலணி ராமர் கோவில் அருகே பெரியகுளம் நோக்கி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது நெடுஞ்சாலைத் துறையினரால் விபத்தினை தடுக்கும் வகையில் போடப்பட்டிருந்த வேகத் தடையில் சென்றுள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து வந்த அம்சவள்ளி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில் ரத்தம் வெளியேறி அவர் அங்கே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் தீபக்குமாரும் காயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விபத்து நிகழ்ந்த வேகத் தடையில், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் வெள்ளை நிற கோடுகள் இடாததால் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதே போல் நெடுஞ்சாலையில் பல இடங்களில் வேகத் தடைகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் இடாமல் நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பெண் உயிரிழந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!