பெரும் பரபரப்பு... அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதி கைது?
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் நர்கிஸ் முகமதி. அவரை ஈரான் அரசு கைது செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். நர்கிஸ் முகமதியின் பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தெஹ்ரானிலிருந்து 680 கி.மீ. தொலைவில் மஹ்சத் என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு மர்மமான முறையில் இறந்துபோன மனித உரிமைகள் வழக்குரைஞரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது நர்கிஸ் முகமதி கைது செய்யப்பட்டதாக அறக்கட்டளை கூறியுள்ளது.
ஆனால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர் முகமதி (53) என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!