15 கிமீ தூரத்திற்கு அசைவ உணவுத் டெலிவரிக்கு தடை.... அயோத்தி ராமர் கோவிலை சுற்றி அதிரடி உத்தரவு!
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ பரிமாறவோ ஏற்கனவே தடை அமலில் உள்ளது.
சமீபத்தில் சில ஆன்லைன் நிறுவனங்கள் அந்தப் பகுதிகளில் அசைவ உணவுகளை விநியோகித்ததாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பரபரப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்மீக நகரத்தின் சுத்தியையும், மக்கள் நம்பிக்கையையும் பாதுகாக்க இது முக்கியம் என்று கூறப்படுகிறது.
மாண்புமிகு மாவட்ட நிர்வாகம், தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் அயோத்தியில் ஆன்லைன் டெலிவரி சேவைகள் அசைவ உணவுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!