சியோலை குறிவைத்து வடகொரியா ஏவுகணை சோதனை… பெரும் பரபரப்பு!
தென் கொரியாவின் தலைநகர் சியோலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் கிழக்கு கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல், இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் கடலோரக் காவல்படையும் அறிவித்துள்ளது. அவை ஏற்கெனவே கடலில் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை துல்லிய தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் முன் இச்சோதனைகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஜனவரி தொடக்கத்தில் தென் கொரிய அதிபர் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏவுகணை உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் வடகொரியா, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!