வடகொரியாவில் 99.93 சதவீத வாக்குகள் பெற்று கிம் ஜோங் உன் மீண்டும் அதிரடி வெற்றி! 

 

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடைபெற்ற 15-வது மக்கள் பேரவைத் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் பதிவான வாக்குகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 99.99 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 1957-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 0.07 சதவீத மக்கள் அதிபருக்கு எதிராகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

மொத்தம் 687 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தார். இதனால் இந்தத் தேர்தலை ஒரு "காட்சித் தேர்தல்" (Show Election) என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர். இருப்பினும், நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், மக்கள் தங்களின் தலைவரின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை உலகுக்குக் காட்டவும் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாகப் பியாங்யாங் நிர்வாகம் கூறுகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்-கும் கல்லிம்கில் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அணு ஆயுதச் சோதனை மற்றும் ஏவுகணைத் தயாரிப்புகளால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் வேளையில், இந்தத் தேர்தல் வெற்றி கிம் ஜோங் உன்னின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வரும் மார்ச் 22-ஆம் தேதி கூடும் புதிய மக்கள் பேரவைக் கூட்டத்தில், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்றும், கிம் ஜோங் உன் புதிய பதவிப் பெயருடன் தேசத்தை வழிநடத்த வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!