மகளுடன் ஏவுகணை சோதனை ஆய்வு... வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை! 

 

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தனது இளம் மகள் கிம் ஜு ஏ உடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் பார்வையிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியா நடத்தி வரும் கூட்டுப் போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வடகொரிய கடற்படையில் உள்ள ‘சோய் ஹியோன்’ போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளில் இலக்குகளை துல்லியமாகத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிம் ஜோங் உன் தனது 13 வயது மகளுடன் சோதனையை கண்காணிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக கிம் ஜோங் உன் உடன் அவரது மகள் கிம் ஜு ஏ பல்வேறு நிகழ்வுகளில் தோன்றி வருகிறார். எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவரை முன்னிறுத்த வாய்ப்பு இருப்பதாக தென்கொரியா உளவுத்துறை கணித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா–தென்கொரியா போர் பயிற்சி வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!