வடகொரியா ஏவுகணை சோதனை… ஜப்பான் அவசர எச்சரிக்கை!
வடகொரியா சந்தேகத்திற்குரிய ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் உடனடி கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சனே தகைச்சி அவசரநிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். ஏவுகணை சென்ற பாதையைத் தீர்மானிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜப்பானில் பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் கடற்படை தகவலின்படி மதியம் 1.30 மணியளவில் வடகொரியா ஏவுகணை ஏவியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த ஏவுகணை ஜப்பானின் பொருளாதார கடல் எல்லைக்கு வெளியே கடலில் விழுந்ததாகவும் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பான் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!