மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிய 'சைக்கோ' கணவன்!

 

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் பிர்ஹட் கிராமத்தில், பொலொ கான் - பனா தம்பதி இடையே நடந்த சண்டை, ரத்தக் களரியில் முடிந்துள்ளது. குடும்பத் தகராறு என்றால் வார்த்தைகளால் மோதிக்கொள்வது போய், இப்போது 'காட்டுமிராண்டி' தனமாக உருமாறி நிற்பதுதான் ஊருக்கே அதிர்ச்சியைத் தந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவன், ஆடு மாடுகளை விட மோசமாகத் தனது மனைவியைக் கடித்துக் குதறியுள்ளான்.

வெறும் அடியோடு நிற்காமல், ஆத்திரத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பியதோடு, கழுத்திலும் சரமாரியாகக் கடித்துக் குதறியுள்ளான் அந்த 'நரமாமிச' கணவன். படுகாயமடைந்த அந்தப் பெண், ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கணவனே, இப்படி மிருகமாக மாறித் தாக்கியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "வாய்த் தகராறுக்கு இப்படியா வன்முறை?" என்று அக்கம் பக்கத்தினர் அந்த ஆசாமியைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். மனைவியின் முகத்தையே சிதைத்த அந்தப் பாவியைத் தூக்கி உள்ளே போட்டு, உரியப் பாடம் புகட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!