பிரபல வரலாற்றாசிரியர் கே.என். பணிக்கர் காலமானார்!
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான கே.என். பணிக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 89. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு கல்வி மற்றும் வரலாற்று ஆய்வு உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் 1936 ஆம் ஆண்டு பிறந்த பணிக்கர் இளம் வயதிலிருந்தே வரலாற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணிபுரிந்து ஆய்வுப் பணிகளில் முக்கிய பங்காற்றினார்.
நவீன இந்திய வரலாறு மற்றும் காலனித்துவ காலத்தின் அறிவுசார், கலாசார வரலாறு குறித்து பல முக்கிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சிந்தனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவராகவும் அறியப்பட்டார். அவரது 90வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவர் மறைந்திருப்பது வரலாற்று ஆய்வு துறைக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!