undefined

இனி அதிரடி சாகசம் தான்! கோலிவுட்டில் TTF வாசன்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

 

சினிமா எனும் மாயபூதம் யாரை எப்போது புகழின் உச்சாணியில் தூக்கி நிறுத்தும் என்பது கால கணக்கு. பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது பிள்ளைகளை எப்படியாவது விசிட்டிங் கார்டு கொடுக்காமலேயே ஹிட்டாக்கி விட வேண்டும் என்று கை நெறைய உப்பையும் சாப்பிட்டு, குவளை நிறைய தண்ணீரையும் குடிக்கிற உலகம் கோடம்பாக்கம். தியாகராஜன் எல்லாம் பானை நெறைய தண்ணீரைக் குடிச்சிருப்பாரு? ஆனாலும், பிரசாந்தின் வளர்ச்சியில் வேராக இருந்தவரே  பிரசாந்த் வளர்ந்து வந்த நேரத்தில் வேரில் ஊற்றுகிற வெந்நீராகவும் பல சமயங்களில் மாறி போனது அவரது அன்பு.

அட இவ்வளவு ஏன்.. இளைய தளபதியாக அறிமுகமாகி தளபதியாக உயர்ந்து நிற்கிற நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு வேராக இருந்த எஸ்.ஏ.ஸி.  தானே வேரில் ஊற்றுகிற வெந்நீராகவும் தனது அதீத அன்பால மாறிப் போனாரு? அதே சினிமா தான் எந்த பின்புலமும் இல்லாமல் வந்த தல அஜித்துக்கு கோடிகளைக் கொட்டி கொடுக்குது. மன்றங்கள் வேண்டாம்னு சொன்னாலும் நாடு கடந்தும் ரசிகர்கள் கொண்டாடுறாய்ங்க..  ஒரு கட்சியும் வேணா... எனக்கு கொடியும் வேணாம்னு ரஜினி சொன்னாலும் காலம் எங்கே அவரை சும்மா நிறுத்துச்சு. சரி.. விஷயத்துக்கு வருவோம்.

இளசுகளின் ஹார்ட் பீட்டை தனது சாகசங்களால எகிற செய்யும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட்டாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2கே கிட்ஸ்களின் ஆதர்ஷ நாயகன் டிடிஎஃப் வாசன்.  மனுஷனும் எந்த பந்தாவும் இல்லாமல் யூ -ட்யூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், வாசன் அடுத்ததாக படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

அவரது பிறந்த நாளான வரும் வியாழன் அன்று அவர் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் வாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, வாசனின் பட அறிவிப்பு தொடர்பாக மீம்ஸ்களும் வரத் தொடங்கியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்