இனி ரூ.15,000 லிமிட்... யுபிஐ பரிவர்த்தனையில் அதிரடி மாற்றம்! கூகுள் பே-வை பின்னுக்குத் தள்ளிய BHIM ஆப்!

 

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது, யுபிஐ பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் 'யுபிஐ சர்க்கிள்' (UPI Circle) என்ற புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், தங்கள் கணக்குடன் இணைக்கப்படாத குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என 5 செகண்டரி ஐடிகளுக்குப் பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்க முடியும். இந்தச் சேவையை இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப் இப்போது முழுமையாக அமல்படுத்தி, தனி கவனம் பெற்றுள்ளது.

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஐடி: இதில், முதன்மை (Primary) யுபிஐ ஐடி மட்டுமே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். மற்ற 5 இரண்டாம் நிலை (Secondary) ஐடிகள், இந்த முதன்மை ஐடியுடன் இணைக்கப்படும். இந்த இரண்டாம் நிலை ஐடிகள் மூலம், ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ. 5,000 வரையிலும், ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ. 15,000 வரையிலும் பரிவர்த்தனை செய்ய முடியும். செகண்டரி ஐடிகள் மூலம் ஒரு பரிவர்த்தனையைச் செய்வதற்கு, முதன்மை ஐடியை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் அனுமதி (Authorization) கட்டாயம் தேவைப்படும்.

இந்த 'யுபிஐ சர்க்கிள்' வசதி ஒட்டுமொத்த யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் விருப்பமாக இருந்தாலும், இதில் உள்ள 'ஃபுல் டெலிகேஷன்' (Full Delegation) எனும் மாதாந்திர ரூ. 15,000 லிமிட், இன்னும் Google Pay, PhonePe, Paytm போன்ற முன்னணி ஆப்களில் அமலுக்கு வரவில்லை. ஆனால், NPCI-யின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்பில் இந்த அதிகபட்ச மாதாந்திர வரம்பு முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், வங்கிக் கணக்கு இல்லாத 5 பேருக்கு யுபிஐ பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கும் வசதியை, முழு லிமிட்டுடன் பீம் ஆப் மட்டுமே முதலில் வழங்கி, மற்ற ஆப்களைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளித் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பகமானவர்களுக்குப் பரிவர்த்தனை வசதியை வழங்க, பீம் ஆப்பில் உள்ள யுபிஐ சர்க்கிள் பிரிவில் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

BHIM ஆப்பைத் திறந்து, 'யுபிஐ சர்க்கிள்' பிரிவுக்குச் செல்லவும். 'சர்க்கிளுக்கு அழைக்கவும்' (Invite to circle) என்பதைத் தேர்ந்தெடுத்து, இணைக்கப்பட வேண்டியவரின் கான்டாக்ட் எண்ணை உள்ளிடவும். அவர்களின் யுபிஐ ஐடியை அல்லது QR குறியீட்டைச் ஸ்கேன் செய்து இணைக்கலாம். பிறகு 'மாதாந்திர வரம்பை அங்கீகரித்தல்' (Approve a Monthly Limit) மற்றும் 'ஃபுல் டெலிகேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உறவைத் தேர்வுசெய்து (மனைவி/குழந்தை), அவர்களின் ஆதார் கார்டைப் பயன்படுத்தி அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். மாதாந்திர லிமிட்டை (ரூ. 15,000 வரை) மற்றும் செல்லுபடியாகும் காலத்தைக் (அதிகபட்சம் 5 ஆண்டுகள்) கொடுத்து அங்கீகரிக்கவும்.

முதன்மை வாடிக்கையாளர் அனுமதி அளித்தவுடன், இரண்டாம் நிலை பயனர்கள் உடனடியாக யுபிஐ பேமெண்ட்களைச் செய்யத் தொடங்கலாம். இந்த வசதி, நிதிப் பரிவர்த்தனைகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நம்பிக்கையையும் வசதியையும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!