முகநூலில் அவதூறு பதிவு... பாஜக பிரமுகா் கைது!
May 2, 2025, 17:50 IST
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்டதாக திருச்செந்தூரில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் இசக்கி (29) பாஜக பிரமுகா். இவா், மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில், தனது முகநூலில் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவு வெளியிட்டுள்ளாா்.
இவரது பதிவு மத கலவரத்தை தூண்டுவதாக கொலுவை நல்லூரைச் சோ்ந்த ஸ்டீபன்தாஸ் மாவட்ட காவல்துறை எஸ்பி ஆல்பா்ட் ஜானிடம் புகார் அளித்தாா்.
இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் இன்னோஸ்குமாா் வழக்குப்பதிந்து இசக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!