undefined

அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வங்காள தேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல்!

 

மாணவர் புரட்சி மற்றும் ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, வங்காள தேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நசிருதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கியது தொடர்பாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு, அவருக்குச் சமீபத்தில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை நாடு கடத்தும்படி வங்காள தேசம் இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இடைக்கால அரசின் தலைவராகப் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாள்: பிப்ரவரி 12, 2026. மொத்தம் 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜூலை சாசன வாக்கெடுப்பு: பொதுத் தேர்தலுடன், ஜூலை சாசனம் (July Charter) தொடர்பான வாக்கெடுப்பும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்காள தேச மக்கள்: வெளிநாட்டில் வாழும் வங்காள தேச மக்கள் நாளை (டிசம்பர் 13) முதல் டிசம்பர் 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின்படி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான முக்கிய நாட்கள் பின்வருமாறு:

வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள்: டிசம்பர் 29, 2025.

வேட்புமனு பரீசிலனை: டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 4, 2026 வரை.

மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள்: ஜனவரி 20, 2026.

சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் செயல்முறைகள் நடைபெறும் என்பதை உலகிற்கு நிரூபிக்கத் தங்கள் நாடு தயாராக இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!