அட!! கூரைப்புடவை, பட்டுவேஷ்டி, மெட்டி, தாலி!! லண்டன் ஜோடி தமிழ் முறைப்படி திருமணம் !!

 

இந்தியாவில் வசித்து வரும் பலரும் மேற்கத்திய கலாச்சாரப்படி  குழந்தைகள் வளர்ப்பு , திருமணம் , வாழ்க்கை முறையை அமைத்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதே போல் நடைமுறைப்படுத்தியும் திருமணம்,  பிறந்த நாள் விழாக்களை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரிய முறைப்படி வாழவே வெளிநாட்டினர் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது தான் உண்மை. இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர்  மைக்கேல் . இவருடைய மகன் 28 வயது ஆலன். இவர் 28 வயது லியோவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர்  பாண்டிச்சேரி ஆரோவில் வந்து இந்த கலாச்சாரம் பிடித்து போய் இங்கேயே தங்கினர். ஆலன் ஆரோவில்லில் விவசாய பணியும், அவரது  காதலி அதே பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீரா காதல் காரணமாக தமிழர்களின் பாரம்பரிய முறைகள் உடைகள் போன்றவற்றின் ஈர்ப்பு காரணமாக அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.


ஆரோவில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி சேலை அணிந்து திருமாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த செயல் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.திருமண விழாவில் வெளிநாட்டினர் பலர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதிகளை அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதை பார்த்தாவது இளைய தலைமுறையினர் தமிழ் பாரம்பரியம், கலாச்சார முறைகளின் பெருமையை உணர்ந்து அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இந்த தம்பதிகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க