அட கொடுமையே... ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து காதலுனும் மருத்துவமனையில் அனுமதி!
பட்ட காலிலேயே படும் என்பார்கள். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று, தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அந்த துயரம் நிகழ்ந்தது. யார் கண் பட்டதோ? என்று உறவினர்கள் பதறினார்கள். ஸ்மிருதி மந்தனாவின் தந்தை, மாரடைப்பால் சுருண்டு விழுந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின்னர், திருமணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மிருதியின் காதலனும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் குடும்பத்தில் மகிழ்ச்சியை முந்தி துயரம் தாக்கியிருக்கிறது.முதலில் ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட, அவரை மருத்துவமனையில் அனுமதித்த துயரமே இன்னும் உறவினர்களிடம் இருந்து விலகவில்லை.
தற்போது மணமகன் பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஸ்மிருதியை விட அவரது தந்தையுடன் அதிக நெருக்கம் கொண்டிருந்த பலாஷ், உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன் திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்ற முடிவை எடுத்ததாக அவரது தாயார் கூறியுள்ளார்.
தொடர்ந்து வருந்தி அழுது மன அழுத்தத்தில் இருந்ததால் உடல் சக்தி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் விளக்கினார். பரிசோதனைகளின் பின்னர் பலாஷின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாகவும், அதிக மன உளைச்சல் காரணமாக ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ஸ்மிருதியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமண விழாவிற்கு முன்பு மகிழ்ச்சியுடன் பாடலுக்கு நடனமாடிய அவர், உடல் நலக்குறைவை முதலில் மறைத்திருந்ததாகவும் பின்னர் நிலைமை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதாகவும் குடும்பத்தினர் கூறினர். மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்த திருமண வீடு தற்போது வேதனையில் உழல்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!