undefined

அட கொடுமையே... மருத்துவமனையில் உயிரிழந்தவரின் கழுத்தில் இருந்து 4 சவரன் செயினைத் திருடும் இளம்பெண்... பகீர் சிசிடிவி வீடியோ!

 

உயிரிழந்தவர் ஒருவரின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்கச் செயினைத் திருடிய இளம்பெண்ணை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ் எஸ்.எஸ்.புரம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மனைவி கமலம்(82) உடல் நலக்குறைவால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். வரும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்ததாகத் தெரிகிறது.  இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு 802 வது அறையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.  

<a href=https://youtube.com/embed/rOtNpD5Ebxg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/rOtNpD5Ebxg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 சவரன்   தங்க செயின் திருடு போனது செயின் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்த கமலம் என்பவரின் மருமகன் ரவிச்சந்திரன் கானாவிளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது பெண் ஒருவர் மூதாட்டியின் உடலில் இருந்து தங்கச் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், உறவினரின் சிகிச்சைக்காக வந்த தேனி வளையப்பட்டி பகுதியில் சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த நந்தினி என்ற அந்த பெண்ணை கானாவிளக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?