நாடு முழுவதும் ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்... சேவை பாதிப்பு மிக அபாயம்!
ஊபர், ஓலா, ரேபிடோ உள்ளிட்ட செயலி அடிப்படையிலான டாக்சி சேவைகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி பணிகளை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தத்தால் வாடகை கார்கள், ஆட்டோ மற்றும் பைக் டாக்சி சேவைகள் இன்று கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை நாளானதால் பயணிகள் பெரிதும் சிரமம் அனுபவிக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. பல நகரங்களில் சேவை தடை ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கு தேசிய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஓட்டுநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!