undefined

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு!

 

வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 300 இடங்களில், தாரிக் ரஹ்மானின் பி.என்.பி. கட்சி 209 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

வரும் பிப்ரவரி 17ம் தேதி மதியம் வங்கதேச நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில்பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 17 ஆண்டுகாலப் புலம்பெயர் வாழ்க்கைக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான், முதல்முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார்.

வங்கதேசத்தின் புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், அவரால் இதில் பங்கேற்க இயலவில்லை: அதே நாளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வரவுள்ளார். அவருடன் மும்பையில் திட்டமிடப்பட்டுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டியுள்ளது.

பிரதமருக்குப் பதிலாக, இந்தியாவின் உயர்மட்ட அரசியலமைப்புச் சட்டப் பிரதிநிதியான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பப்படுவது ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும்.

வங்கதேசத்தில் புதிய ஜனநாயக முறைப்படி அமைந்த ஆட்சிக்கு இந்தியா அளிக்கும் மரியாதையை இது வெளிப்படுத்துகிறது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஓம் பிர்லாவுடன் டாக்கா செல்ல உள்ளனர்.

இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, அங்கு ஒரு நிலையான ஜனநாயக அரசு அமைவதை சர்வதேச நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!