அதிகாலையில் அதிர்ச்சி... நின்று கொண்டிருந்த லாரியில் ஆம்னி பேருந்து மோதல் … 9 பேர் காயம்!
சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் காயமடைந்தனர். சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் மேலூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது திடீரென பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் தாக்கத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது.
தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!