undefined

 டிசம்பர் 21ல்  நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்...  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!  

 
 

தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், நாகரிகத்தையும் உலகறியச் செய்யும் வகையில், திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை வரும் டிசம்பர் 21-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். இந்த அருங்காட்சியகம் மொத்தம் ₹56.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி அருகேயுள்ள குலவணிகர்புரம் கிராமத்தில் இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. சுமார் 3,200 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொருநை அருங்காட்சியகத்தில், தாமிரவருணி நதிக்கரையில் செழித்த தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கும் அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அரும்பொருள்களை அழகுறக் காட்சிப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ₹200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்கக் கட்டடத்தையும் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "அருங்காட்சியகத்தின் 97% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் இந்தத் திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டு பணிகளை விரைந்து முடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!