"படிக்கிற கூட்டம் ஒரு பக்கம்... கையை கடிக்கிற கூட்டம் ஒரு பக்கம்" - தவெகவையும், திமுகவையும் சீறிய சீமான்!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் பெண் காவல்துறை அதிகாரியின் கையை கடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமான நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் தவெக மாநாட்டிற்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்வில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை அதிகாரியின் கையை கடித்ததைச் சுட்டிக்காட்டி சீமான் கூறியதாவது: "இன்று தமிழகத்தில் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. ஒரு பக்கம் படிக்கிற கூட்டம் கூடுகிறது, இன்னொரு பக்கம் கையை கடிக்கிற கூட்டம் கூடுகிறது. இதைக் கேட்டால், 'நாங்கள் அணில்கள் தானே... காயையும் கனியையும் கடித்த போது அமைதியாக இருந்துவிட்டு, கையை கடித்தால் மட்டும் கோபப்படுகிறீர்களே?' எனக் கேட்கிறார்கள்."
திராவிடக் கட்சிகள் மற்றும் பெரியார் குறித்து சீமான் தனது உரையில் ஆவேசமாகப் பேசினார்: "இந்த நாட்டைத் திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், தமிழ் மொழி, கலை, பண்பாடு, நிலம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை அழித்ததற்கும் பெரியார்தான் காரணம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம். தமிழர்கள் மட்டும் ஓட்டுப் போட்டால் போதும். இந்த திராவிட திருட்டு சித்தாந்தத்திற்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேதான் இங்கே போட்டியே நடக்கிறது."
திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்களைக் கண்டு பயப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், "பெரிய கட்சி என்கிறார்கள், ஆனால் காசு கொடுத்துத்தான் ஆட்களை மாநாட்டிற்கு அழைத்து வருகிறார்கள். எங்களைப் போலத் தனித்து நின்று, தத்துவத்தைப் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். வறுமையைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவர்களை மக்கள் உணர வேண்டும். தமிழினத்தின் எழுச்சியைத் திராவிடர்கள் தங்களது அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள். ஆட்சி அதிகாரம்தான் அனைத்து மாற்றத்திற்கும் அடிப்படை என்று அவர் வலியுறுத்தினார்.
தங்களது கட்சியின் எழுச்சியை எவராலும் திரை போட்டு மூட முடியாது என்றும், இது கனன்று கொண்டிருக்கும் "புரட்சித் தீ" என்றும் சீமான் எச்சரித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!