undefined

 மெட்ரோ ரயிலில் குதித்து ஒருவர் தற்கொலை... டெல்லியில் தொடரும் சோகம்! 

 
 

டெல்லியை நிறையவே துயரத்தில் ஆழ்த்தும் வகையில், மெட்ரோ ரயிலில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ரோஹினி வெஸ்ட் மெட்ரோ நிலையத்தில் 37 வயதான ஹேமந்த் என்னும் நபர் ரயில் வரும் தருணத்தில் முன் குதித்து உயிரிழந்துள்ளார். ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் என்பதால் பயணிகள் மத்தியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

சம்பவ தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த ஹேமந்த் உடனடியாக ஆம்புலன்ஸில் பி.எஸ்.ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. ரோஹினி செக்டர்-2ல் வசித்த ஹேமந்த், காசியாபாதில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்காத நிலையில், ஃபொரென்சிக் குழுவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ரிதாலாவிலிருந்து வந்த ரயிலை குறிவைத்தே அவர் குதித்திருக்கலாம் என தொடக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே வாரத்தில் இது இரண்டாவது தற்கொலை சம்பவமாகும். நாடு அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 16 வயது பள்ளி மாணவன் ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் ரயிலின் முன் குதித்து உயிரிழந்திருந்தான். “அம்மா, உங்களை வருத்தித்தேன், மன்னியுங்கள்’’ என்று ஒரு குறிப்பை எழுதி விட்டு தற்கொலை செய்த அந்த சிறுவன், தனது உடற்கூறுகளை தானமாக வழங்க வேண்டும் என்றும் மனவேதனையை வெளிப்படுத்தியிருந்தான். பள்ளி ஆசிரியர்களின் தொடர்ந்த கண்டிப்பு மற்றும் மன உளைச்சலே காரணம் என போலீசார் தெரிவித்தனர். பெற்றோரும் இதுகுறித்து பள்ளியிடம் பலமுறை புகார் செய்ததாக வேதனையுடன் கூறியிருந்தனர்.ஒரே வாரத்தில் இரண்டு உயிரிழப்புகள் – டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் மனநல பிரச்சனைகள் குறித்து தீவிர கவனம் தேவைப்படுவதாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!