undefined

 மாடு முட்டி ஒருவர் பலி... பெரும் சோகம்! 

 
 

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதி முதியவர் ஆனந்தன், சில நாட்களுக்கு முன் தெருவில் நடந்துச் சென்றபோது தெருமாடு முட்டியதில் கடுமையாக காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் இவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் பல நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று அவர் உயிரிழந்தார்.

இந்த மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பிறகு சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதை எதிர்த்து மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலைமாடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் இருந்தபோதிலும் உரிமையாளர்கள் விதிக்கப்பட்ட ₹10 ஆயிரம் அபராதத்தைக் கவனிக்காமல் மாடுகளை சாலைகளில் அலைந்து திரிய விடுவதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெருமாடு பிரச்சினையை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலையை மீண்டும் உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!