அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் ஓராண்டு சிறை… அமைச்சர் அதிரடி!
Apr 28, 2025, 17:20 IST
தமிழக சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் ஸ்டாலின் இன்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உட்பட பல்வேறு அசத்தல் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ளார்.
அந்த புதிய மசோதாவில், ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
அத்துடன் ரூ5000 அபராதமும் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 15,000 என்ற கட்டணத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் உரிமம் பெறலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!