சிறுவன் கால் இடறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு... பெரும் சோகம்! 

 
 

தேனி மாவட்டம் கம்பம் அருகே காக்கில் சிக்கையகவுண்டன்பட்டி பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் கூலித்தொழிலாளர். அவரது மனைவி அபிசதா (22) சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி, பிரசவத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடலூர் பசும்பொன் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். கடந்த மாதம் 14ஆம் தேதி கம்பம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததும், அவர் இரு குழந்தைகளுடனும் அங்கேயே வசித்து வந்தார்.

நேற்று, அபிசதா வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, புதிதாகப் பிறந்த குழந்தை தரையில் படுத்திருந்தது. அவ்வேளையில் வீட்டுக்குள் விளையாடிய மூத்த மகன் திடீரென தடுமாறி, தரையில் இருந்த சிசுவின் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியில் குழந்தையின் மூக்கில் ரத்தம் வழிந்தது. அழுகுரல் கேட்டு ஓடிய அபிசதா, நிகழ்வைக் கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக உறவினர்களின் உதவியுடன் குழந்தையை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!