undefined

ஆன்லைன்  விளையாட்டால் விபரீதம்...  சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பெண் பொறியாளர் ! 

 

 

ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மென்பொருள் பெண் பொறியாளரிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் செசெட்டி ரேவதி (33) மற்றும் அவரது காதலன் நரேந்திரா (23) கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த ரேவதி, கணவரை பிரிந்து ஹைதராபாத்தில் தனியாக வசித்து வந்தார். ஆன்லைன் விளையாட்டு பழக்கமும், சொகுசு வாழ்க்கை விருப்பமும் காரணமாக கடன் சுமையில் சிக்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபிடோ ஓட்டுநரான நரேந்திராவுடன் ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமான ரேவதி, சில மாதங்களாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். சம்பவத்தன்று டெலிவரி வேலைக்கு செல்கிறோம் போல நடித்து, சாலை எண் 44-ல் நடந்துசென்ற மானசா என்ற பெண்ணை குறிவைத்து 1.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

புகாரின் பேரில் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருவரையும் கண்டுபிடித்தனர். ஆந்திர எல்லை வழியாக தப்ப முயன்ற அவர்களை கைது செய்து, தங்கச் சங்கிலி, ஸ்கூட்டி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். டிஜிட்டல் பழக்கங்கள் பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுத்து குற்றமாக மாறும் அபாயத்தை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!