நாளை முதல் தமிழகம் முழுவதும் அறிமுகம்... இனி கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தலாம்!

 

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்படுத்தயுள்ளனர். கிராம ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரிவசூல் நடக்கிறது. வளர்ந்த ஊராட்சிகளில் மட்டும், கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது. வரி வருவாயை, வங்கி கணக்கு வாயிலாக கையாள வசதியாக, ‘ஆன்லைன்’ வரிவசூல் நடைமுறை, நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில்  அரசு அலுவலகங்கள்  அனைத்திலும் படிப்படியாக காகிதமில்லா நடைமுறையை செயல்படுத்த முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுவருகின்றன.  இதன் மூலம் அரசின் சேவைகள் மிக எளிதாக மக்களுக்கு கிடைக்க வகை செய்ய முடியும். அதே நேரத்தில் அவர்களின் தேவைகளும் எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு விடும்.  அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்னமும் கணினிப் பயன்பாடு 100 சதவீதத்தை எட்டவில்லை.

தமிழகத்தில் மொத்தமாக 12,000க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள்  செயல்பட்டு வருகின்றன.  அந்தந்த  கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி இவைகளை நேரில் சென்று செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உட்பட  அனைத்து வரிகளும் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதன்படி கிராம ஊராட்சிகளில் வரிகளை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில்  வீடு, சொத்து, குடிநீர் வரி உட்பட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதன்படி நாளை முதல்  கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி  இணையதளம் மூலம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம் எனவும்  தெரிவித்துள்ளனர். ஊரக பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலருக்கே அதிகாரம் உண்டு. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை ஆன்லைன் மூலமே  பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.நாளை  மே 22 முதல் இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் எனவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!