ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்...  மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

டாக்டராகி பல உயிர்களைக் காக்க வேண்டிய ஒரு இளம் மருத்துவ மாணவர், ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் தனது உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது அனிஷ்கர், பீதர் அரசு மருத்துவக் கல்லூரியில்  இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். படிப்பு ஒருபுறம் இருக்க, இவருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஜாலியாக விளையாடத் தொடங்கிய அனிஷ்கர், சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ரூபாயைத் தோற்றுள்ளார். இழந்த பணத்தை மீட்கும் ஆசையில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் கைமாற்றாகக் கடன் வாங்கி மீண்டும் விளையாடியுள்ளார். ஆனால், அந்தப் பணமும் கைவிட்டுப் போக, கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் அனிஷ்கர்.

இந்நிலையில், தனது விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சக மாணவர்கள் அறைக்கு வந்து பார்த்தபோது அனிஷ்கர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து வந்த பீதர் போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் ஒரு திறமையான எதிர்கால மருத்துவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!