அச்சச்சோ... தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்... உலக தங்க கவுன்சில் கணிப்பு!!
தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2026) தங்கம் விலை மேலும் ஒரு மிகப்பெரிய உயர்வைச் சந்திக்கும் என்று 'உலக தங்க கவுன்சில்' (WGC) வெளியிட்டுள்ள கணிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தங்கச் சுரங்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த சர்வதேச அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் டெயிட், தங்கம் விலை உயர்வு குறித்து அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விலை உயர்வுக்கான பின்னணி என்ன?
சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு பொருளாதாரக் காரணிகளே இந்த விலை உயர்வுக்கு அடிப்படை என டேவிட் டெயிட் விளக்கியுள்ளார். குறிப்பாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் பண இருப்புக்கு மாற்றாகத் தங்கத்தை அதிகளவில் வாங்கிச் சேமிப்பது முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், சீனாவில் தங்கம் வாங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டது, ஜப்பானில் நிலவும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது மற்றும் உலக அளவில் நிலவும் அரசியல் நிதிநிலையற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுவது போன்றவை விலையை ஏறுமுகத்தில் வைத்திருக்கப் போகின்றன.
எவ்வளவு உயரும்?
தற்போதைய டாலர் மதிப்பின்படி கணக்கிட்டால், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் 5.40 லட்ச ரூபாய்க்கும் மேல் உயரக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இதனை இந்தியச் சந்தையின் அடிப்படையில் பார்த்தால், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் மதிப்பு ரூ. 1.90 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை எட்ட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் சுமார் ரூ. 1.50 லட்சம் முதல் ரூ. 1.60 லட்சம் வரை விற்கப்படும் சூழல் உருவாகலாம்.
விலை குறைய வாய்ப்புள்ளதா?
இந்தக் கணிப்புகள் அனைத்தும் தற்போதைய உலகச் சூழலை அடிப்படையாகக் கொண்டவை. ஒருவேளை அமெரிக்கப் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக மிக வேகமாக முன்னேறினாலோ அல்லது தற்போது பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்கள் முற்றிலுமாகத் தணிந்து அமைதி நிலவினாலோ மட்டுமே தற்போதைய கணிப்பில் மாற்றங்கள் வரக்கூடும். 2024-ல் இந்த அமைப்பு கணித்தபடியே, 2025-ல் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்கான இந்தக் கணிப்பு இல்லத்தரசிகளையும், பெண் பிள்ளைகளை வைத்துள்ள பெற்றோர்களையும் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!