undefined

தொடர் மண்சரிவு...  உதகை மலை ரயில் ரத்து!

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அடர்லி மற்றும் ஷில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட மலை ரெயில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது. சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் காரணமாக உதகை மலை ரெயில் சேவை இன்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விழுந்த மணல் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பின் சேவை மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!