சாலையில் திறந்த சாக்கடை… கண் இமைக்கும் நேரத்தில் உள்ளே விழுந்த இளம்பெண்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில் திறந்திருந்த பாதாளச் சாக்கடை குழிக்குள் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்தார். இந்தூர் மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
படா சராபா சந்தைப் பகுதியில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எவ்வித எச்சரிக்கை பலகையோ, தடுப்புகளோ இல்லாமல் குழியின் மூடியை திறந்தே வைத்திருந்தனர். அந்த வழியாக சென்ற இளம்பெண், குழி திறந்திருப்பதை கவனிக்காமல் நேரடியாக அதற்குள் விழுந்தார்.
உடனே பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். காலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், கழிவுநீரில் விழுந்ததால் உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவ வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் அலட்சியமே இதற்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!