undefined

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை முதன்முறையாக காட்சிக்கு வைத்தது இந்திய ராணுவம்!

 

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை, இந்திய ராணுவம் முதல் முறையாகக் காட்சிக்கு வைத்துள்ளது. பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடித் தாக்குதல் நடத்தியபோது, இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே எல்லை மோதல் வெடித்தது. அந்த மோதலின்போது பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட 'YIHA' என்ற ட்ரோன் ஒன்றை இந்திய ராணுவம் தற்போது டெல்லியில் உள்ள ராணுவத் தளபதியின் இல்லத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த ட்ரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ வெடி பொருட்களுடன், இந்த ட்ரோனைப் பாகிஸ்தான் ராணுவம் மே 10-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் பகுதியை நோக்கி ஏவியது.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, அமிர்தசரஸ் அருகே இந்த ட்ரோனைச் சரியாகக் கண்காணித்துச் சுட்டு வீழ்த்தியது. கீழே விழுந்த ட்ரோனை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி, அதன் பாகங்களை ஒருங்கிணைத்துத் தற்போதுப் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிக்கு வைத்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலுக்குப் பின், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே எல்லை மோதல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!