undefined

 பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள்  திடீர் போராட்டம்!

 
 

2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலில் வந்துள்ளன. 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து தொழிலாளர் நலனை மேம்படுத்தும் நோக்கில் இவை உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “கார்பரேட் ஆட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக முன்ப தினமும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!