undefined

 பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆலோசனை… விரைவில் அரசியல் முடிவு?

 
 

பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணி, தேர்தல் உத்தி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இணைந்தாலும் ஓபிஎஸ்-க்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. இதனால் அவர் தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்து வந்தார். இந்த நிலையில் அமமுக அணியில் குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “டிடிவி தினகரனும் இபிஎஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அந்த முயற்சி நடந்தால் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என்றார். இதன்மூலம் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பை அவர் மறைமுகமாக வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!