undefined

  பத்திரமா இருங்க மக்களே... இந்த மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்!  

 


தமிழகத்தில்   வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக, நேற்று ஜூன் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 05.30 மணிக்கு  தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடையக்கூடும்.


இதன் காரணமாக  ஜூன் 18ம் தேதி  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழைக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  


நாளை முதல் ஜூன் 23 வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.சென்னை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல்  மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது