இந்தியா முழுவதும் 8 மாநிலங்களுக்கு 'ஆரஞ்சு' அலெர்ட்...   இடி, மின்னலுடன் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று  ...  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! 

 

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அதிரடியான வானிலை மாற்றத்தை முன்கூட்டியே கணித்துள்ளது.  அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் மணிக்கு  80  கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் மார்ச் 24ம் தேதி வரை பரவலான மழை நீடிக்கும் . அதேபோல், வடமேற்கு இந்தியாவிலும் ஈரப்பதமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதால், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்   பகுதிகளில் லேசான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யக்கூடும். தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை, நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இன்றும் மாலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய  வானிலை விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் கலந்த சூழல் நிலவினாலும், ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மார்ச் மாத இறுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றம், ஒரு புறம் வெப்பத்திலிருந்து நிம்மதி அளித்தாலும், மறுபுறம் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!