undefined

மூளைச்சாவு அடைந்த கரூர் இளைஞரின் உடல்  உறுப்புகள் தானம்!  

 

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கரூர் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, காத்திருப்போர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவரது உறவினர்கள் முன்வந்து உறுப்புகளை தானம் செய்தனர். தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் வழங்கப்பட்டது.

ஒரு சிறுநீரகம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் தேவையுள்ள நபர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டன.

அன்பரசனின் உடலுக்கு அரசு மருத்துவமனை முதன்மை தலைமையில் மரியாதை அளிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் கீழவெளியூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குளித்தலை நகர துணைக் காவல்கண்காணிப்பாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!