undefined

பத்திரப்பதிவில் அதிரடி மாற்றங்கள் - இனி 'ஒரிஜினல்' ஆவணங்கள் கட்டாயம்!

 

போலிப் பத்திரப் பதிவுகளை ஒழிக்கவும், உண்மையான சொத்து உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. சொத்தை விற்பவர், அந்தச் சொத்தின் அசல் விற்பனை ஆவணத்தைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது பதிவு செய்யப்பட உள்ள சொத்து, விற்பவருக்கு எப்படி வந்தது என்பதற்கான முந்தைய மூல ஆவணங்களையும், வில்லங்கச் சான்றிதழையும் (EC) கட்டாயம் காட்ட வேண்டும். ஒருவேளை அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால் அல்லது இல்லையென்றால், வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்ட பட்டாவை அசல் ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம்.

சொத்து ஏதேனும் வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருந்தால், சம்பந்தப்பட்ட அடமான உரிமையாளரின் தடையின்மைச் சான்றிதழ் இல்லாமல் அந்தச் சொத்தைப் பதிவு செய்ய முடியாது.

தமிழ்நாடு பத்திரப்பதிவுச் சட்டம், 1908-ல் கொண்டு வரப்பட்ட இந்தத் திருத்தங்கள், போலி ஆவணங்கள் மூலம் ஒருவரது சொத்தை மற்றொருவர் விற்பதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, போலிப் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தைச் சார்பதிவாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கியிருந்தது. தற்போது அசல் ஆவணங்களைக் கட்டாயமாக்கியதன் மூலம், போலிப் பதிவுகளே நடக்காத சூழலை உருவாக்க அரசு முயல்கிறது.

2026-ம் ஆண்டு முதல், அசல் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியைச் சார்பதிவாளர்கள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளும் வகையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவணங்களின் உண்மைத்தன்மையை நொடிப் பொழுதில் கண்டறிய முடியும். இந்தச் சட்டத்தின் மூலம், ஒருவர் வாங்கும் சொத்து சட்ட ரீதியாகப் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நீதிமன்ற வழக்குகளை இது வெகுவாகக் குறைக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!