undefined

ஜனவரி 12ம் தேதி பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம்! 

 
 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பாரம்பரிய வழக்கப்படி அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இந்த திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், மகரவிளக்கு விழாவையொட்டி ஊர்வலமாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு திருவாபரணங்கள் 12-ந் தேதி பந்தளம் அரண்மனையிலிருந்து வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பிறகு, 3 சந்தன பேழைகளில் திருவாபரணங்கள் சபரிமலை நோக்கி தலைச்சுமையாக ஊர்வலமாக புறப்படும். இந்த ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்குகிறது.

14-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வந்த திருவாபரணங்கள் மாலை 6 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்துச் சென்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!