ஆஸ்கர், கிராமி விருதுகளை வென்ற பிரபல இசையமைப்பாளர் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

 

பிரபல ஜப்பானிய இசை அமைப்பாளர் ரியூச்சி சகமோட்டோ. இவருக்கு வயது 71. கடந்த 2020ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  போராடி வந்தார். இதற்காக  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987 ம் ஆண்டு வெளியான டி லாஸ்ட் எம்பிரர் படத்திற்காக அவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆஸ்கர், கோல்டன் குளோஸ் மற்றும் கிராமி விருதுகளை பெற்றவர். 


1983 ல் டேவிட் போவியுடன் மெர்ரி கிறிஸ்மஸ், மிஸ்டர் லாரன்ஸ் திரைப்படத்தில் நடித்தார்.சகாமோட்டோ 10 வயதில் இசையை கற்றுக்கொள்ள தொடங்கினார். இவர்  தி பீட்டில்ஸ் மற்றும் டெபஸ்ஸியால் ஈர்க்கப்பட்டார்.  1978ல் ஹருவோமி ஹோசோனோ மற்றும் யுகிஹிரோ தகாஹாஷியுடன் இணைந்து YMO ஐ நிறுவி கீபோர்டுகளை வாசித்தார்.  ரீம் இசைக்குழுக்களின் முன்னாள் விசைப்பலகை பிளேயர் தனது ட்விட்டர் சகாமோட்டோ குறித்து பதிவிட்டிருந்தார். அதில் "எனது 80 களின் இசை அனுபவத்தில் சகாமேட்டோ  ஒரு பெரிய பகுதியாக இருந்தார் . தொடக்கத்தில்  டேவிட் சில்வியன் மற்றும் ஜப்பானுடன்  வேலை செய்ததன் மூலம் நிச்சயமாக அவர் இசையின் அற்புதமான பட்டியலை விட்டுச் செல்கிறார்" என பதிவிட்டுள்ளார்.

 சகமோட்டோ தனது இசையமைப்பு குறித்து ஒரு நேர்காணலில் விரிவான விளக்கம் அளித்தார்.  அதில் “ நான் இளமையில் கற்றுக்கொண்டது வரம்பிற்குட்பட்டது. அவற்றை தகர்த்து எறியவே நான் விரும்பினேன். வரம்புகளை தாண்டி பயணப்படவே ஆசைப்படுகிறேன்.  சில சமயங்களில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்களுடன் கலப்பது இந்தச் சுவரை உடைக்க ஒலி உதவும். இசையில் வேறுபாடு கிடையாது. இசை என்றால் இசை தான். அதில் பாரபட்சமோ, வேறுபாடுகளோ கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். சகமோட்டோ  1952 ல் பிறந்தவர் . இவருடைய தந்தை நோபல் பரிசு பெற்ற கென்சாபுரோ ஓ உட்பட ஜப்பானிய எழுத்தாளர்களுக்கு இலக்கிய ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரையன் ஈனோ, அல்வா நோட்டோ மற்றும் செலிஸ்ட் ஜாக்ஸ் மோலென்பாம் இவர்களுடன் பணிபுரிந்தவர். சகாமோட்டோவின் மகள் மியு சகாமோட்டோ. இவர்  ஒரு ஜே-பாப் பாடகி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!