பிரபல ஆஸ்கர் நடிகர் காலமானார்... ஹாலிவுட் உலகில் பெரும் சோகம்!
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டுவல் 95 வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவர் நடித்த The Godfather, Apocalypse Now மற்றும் To Kill a Mockingbird போன்ற திரைப்படங்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. பல்வேறு கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்த அவரது திறமை ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
1983ஆம் ஆண்டு வெளியான Tender Mercies திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். பல தசாப்தங்களாக திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்த அவரது பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும் என திரையுலகினர் தெரிவித்துள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!