undefined

 தட்கல் டிக்கெட்டுக்கு இனி  ஓடிபி கட்டாயம்... இந்தியன் ரயில்வே அதிரடி உத்தரவு! 

 
 

ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் பெற, இனி பயணிகள் தங்கள் மொபைல் போனில் வரும் ஓடிபியை (OTP) வழங்க வேண்டும். கடைசி நேர டிக்கெட் முன்பதிவு முறையில் நடைபெறும் தவறுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே அமைச்சகம் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 17 முதல் சோதனை அடிப்படையில் சில ரயில்களில் தொடங்கப்பட்ட இந்த முறை, தற்போது 52 ரயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, விரைவில் அனைத்து ரயில்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளது.

தட்கல் டிக்கெட்டை கவுன்டரில் முன்பதிவு செய்யும் போது, பயணிகள் நிரப்பும் படிவத்தில் உள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை சரிபார்த்த பிறகே டிக்கெட் உறுதி செய்யப்படும். இது முன்பதிவு முகவர்கள் மூலம் நடைபெறும் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், அதிக தேவை உள்ள தட்கல் டிக்கெட்டுகளை உண்மையான பயணிகளுக்கே வழங்கவும் எடுத்த முக்கியமான முயற்சி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், முன்பதிவு செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் முனைவிலும் இந்த மாற்றம் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ரயில்வே அமைச்சகம் பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஜூலை மாதத்தில், ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓடிபி ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 1 முதல் ஆன்லைன் பொது டிக்கெட்டுகள் முன்பதிவில் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. பயணிகளுக்கு சமமான அணுகலையும் பாதுகாப்பான முன்பதிவுப் பயன்பாட்டையும் உறுதி செய்யும் ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளில் இது ஒன்றாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!