undefined

ஒரே நாளில் 1,000 விமானங்கள் ரத்து.. இண்டிகோ சேவையில் மாபெரும் முடக்கம் - மத்திய அரசு விசாரணை!

 

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) நிறுவனம், விமானிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாகக் கடந்த சில நாட்களாகச் சேவை பாதிப்பைச் சந்தித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

விமான விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (DGCA) புதிய விதிகளை வகுத்தது. அதன்படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன், வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் விதியாக்கப்பட்டது.

இந்தப் புதிய விதிகளை அமல்படுத்த விமான நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் கூடுதல் விமானிகள் மற்றும் பணியாளர்களை நியமித்தபோது, இண்டிகோ நிறுவனம் கால அவகாசத்தைப் பயன்படுத்தாமல் குறைவான பணியாளர்களுடன் சேவையைத் தொடர்ந்தது.

இதன் விளைவாக, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ செயல் தலைவர், விமானச் சேவை வரும் டிசம்பர் 10 முதல் 15-ஆம் தேதிக்குள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விமானச் சேவை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது குறித்துச் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (DGCA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், விமானச் சேவை வரும் திங்கட்கிழமைக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!