undefined

கடந்த 20 நாட்களில் கஞ்சா போதை வழக்கில் 130 பேர் கைது... சென்னையில் சீரழியும் இளையதலைமுறை!

 

சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கக் காவல்துறை மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் பயனாக, இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நைஜீரியா மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். குறிப்பாக, கடந்த சில தினங்களாகத் திருவல்லிக்கேணி மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ற கும்பல் கூண்டோடு பிடிபட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த 18-ஆம் தேதி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 5 இளைஞர்களைப் பிடித்துச் சோதனை செய்ததில், அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அம்பத்தூர், எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அந்த 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 8.5 கிராம் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்தச் சங்கிலித் தொடர் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேர் நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 24 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒட்டுமொத்தமாக 131.6 கிராம் மெத்தம்பெட்டமைன், 219.27 கிலோ கஞ்சா மற்றும் 2,701 வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்களில் திரிபுரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த 20 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் கும்பல் குறித்தும் சென்னை காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் புழக்கத்தைத் தடுக்க, இதுபோன்ற ரகசியச் சோதனைகள் வரும் நாட்களிலும் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!