உ.பி., முசாஃபர் நகரில் மசூதிகளில் இருந்து 55க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றம்!
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் நகரில் ஒலி மாசுபாட்டிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒலி வரம்புகள் குறித்த வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும் விதமாக, நகரிலுள்ள மசூதிகளிலிருந்து 55-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை காவல்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.
முசாஃபர்நகரில் உள்ள சிவில் லைன்ஸ், கோட்வாலி மற்றும் கலப்பர் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் இருக்கும் மசூதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஒலி வரம்பு வழிகாட்டுதல்களை மீறி அதிக சப்தம் எழுப்பிய ஒலிபெருக்கிகளுக்கு எதிராகவே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் அரசு பிறப்பித்த உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு மசூதிகள் மட்டுமல்லாது, கோயில்கள் மற்றும் குருத்வாராக்களின் பராமரிப்பாளர்களுக்கும் பொருந்தும்.
இது குறித்து வட்ட அதிகாரி (நகரம்) சித்தார்த் மிஸ்ரா கூறுகையில், "தற்போதுள்ள அனைத்து ஒலிபெருக்கிகளும் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்" என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் இலக்காகக் கொண்டதல்ல என்றும், அனைத்து மத நிறுவனங்களிலும் சட்டத்தை ஒரே மாதிரியாக அமல்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். விதிமீறல்கள் தொடர்ந்தால், கூடுதல் ஒலிபெருக்கிகள் அகற்றப்படுவதோடு, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!